காணாமல் போன சென்னை துறைமுக அதிகாரி எரித்துக் கொலை
சென்னை: சென்னை துறைமுக அதிகாரியான டெல்லி பாபு கடத்திச் செல்லப்பட்டு திருவண்ணாமலை அருகே மர்ம நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த டெல்லி பாபு, சென்னை துறைமுகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். திருவள்ளூரில் உள்ள தமது உறவினரின் வீட்டுக்கு கடந்த 6-ந் தேதி சென்றுவிட்டு குடும்பத்தினருடன் திரும்பிய அவர் காரை நிறுத்துவதற்காக பார்க்கிங் இடத்துக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அவரது புகைப்படங்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சுடுகாடு ஒன்றில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தவரின் சடலம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரவாயல் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் டெல்லி பாபுவின் மனைவி ரம்யாவை திருவண்ணாமலைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தது டெல்லி பாபு எனத் தெரியவந்தது.
நாள்தோறும் கார் பார்க்கிங்கில்தான் டெல்லி பாபு வாகனத்தை நிறுத்துவார் என்பதை தெரிந்து கொண்டவர்கள்தான் திட்டமிட்டு அவரை கடத்திக் கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications