புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும்: விஜயகாந்த் அறிவிப்பு

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன், சாலை விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூன் 12-ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளராக கார்த்திக் தொண்டமானை அறிவித்து களம் இறக்கியது அதிமுக. கடந்த முறை போட்டியிட்டு வென்ற இந்திய கம்யூனிஸ்ட் இம்முறை போட்டியிடவில்லை என்று அறிவித்தது. இதேபோல் முக்கிய கட்சிகளான திமுக, மதிமுக, பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளும் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டன.
தேமுதிக போட்டி
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொடர்பாக தமது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று அவர் அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டெபாசிட்டைப் பெற்றாவது தங்களது திராணியை நிரூபித்துவிடுவது என்று தேமுதிக முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications