விவசாயி மகளிடம் ஆபாசப் பேச்சு... மனம் வெறுத்து தற்கொலை!
விருதாச்சலம்: விருதாச்சலம் அருகே தன்னிடம் தொலைபேசியில் வாலிபர் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்ததால் மனம் வெறுத்துதப் போன 17 வயது சிறுமி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சின்ன ஆத்துக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. இவரது தந்தை விவசாயி ஆவார். ஈரோட்டில் தங்கி அங்குள்ள கார்மெண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் மீனா.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீனாவின் செல்போனில் ஒரு நபர் தொடர்பு கொண்டார். தனது பெயர் மணி என்று கூறிக் கொண்ட அவர், மீனாவை வர்ணித்து ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியான மீனா இணைப்பைத் துண்டித்தார். அப்படியும் விடாத அந்த நபர் தொடர்ந்து செல்போனில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து தனது தந்தைக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராமானுஜம் ஈரோடு விரைந்தார். தனது மகளை ஊருக்கு அழைத்து வந்து விட்டார்.
அப்படியும் விடாத அந்த வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுக்கவே மீனாவின் தந்தை போலீஸில் புகார் கொடுத்தார். அவர் புகார் கொடுப்பதற்காக வீட்டை விட்டுப் போனபோது மனம் வெறுத்துப் போன நிலையில் வீட்டிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார் மீனா.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications