புதுக்கோட்டையில் யாருக்கு வாய்ப்பளிப்பார் விஜயகாந்த்?
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வலுவான அதிமுகவுக்கு எதிராக யாரை விஜயகாந்த் களமிறக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு தேமுதிகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் அத்தனை கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது.
தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த்தான் ஒரே பலசாலி. எப்படி அதிமுக என்றால் ஜெயலலிதா, திமுக என்றால் கருணாநிதி, மதிமுக என்றால் வைகோவோ அதே போலத்தான் தேமுதிகவின் நிலையும். இந்தத் தலைவர்களின் முகத்தைப் பார்த்துத்தான் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஓட்டுக்கள் விழுகின்றன. சொந்த செல்வாக்கு, பலம், தனித்துவம் கொண்ட வேட்பாளர்கள் என்று கிட்டத்தட்ட யாருமே எந்தக் கட்சியிலும் நிறுத்தப்படுவதில்லை. அப்படிப்பட்டவர்களை தலைவர்களும் கூட பெரும்பாலும் விரும்புவதில்லை.
அந்த வகையில் கார்த்திக் தொண்டைமான் ரூபத்தில் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தல் களம் கண்டுள்ளார். அதேபோல விஜயகாந்த் சார்பில் யார் புதுக்கோட்டையில் நிற்கப் போவது என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தற்போது வேட்பாளர் தேர்வில் விஜயகாந்த் மும்முரமாக உள்ளார். மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் பெயர் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், புதுக்கோட்டை தொகுதியில் முத்தரையர் சமூகத்தினர் அதிகம் உள்ளதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த விஜயகாந்த் முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
எனவே விஜயகாந்த் யாரை நிறுத்தப் போகிறார், நிற்பவர் வெற்றிகரமாக முரசு கொட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications