மே 18- முதல் சத்துணவு மைய காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் விநியோகம்
Subscribe to Oneindia Tamil

சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில் 16,056 இடங்கள் காலியாக உள்ளன. இதில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது..
இதன்படி, இப் பணியிடங்களை நிரப்ப, வரும் 18-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 28-ந் தேதி கடைசி நாள்.
அனைத்து வட்டாரங்களிலும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கு ஜூன் 2-ந் தேதி அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். இதில் தேர்வு பெற்றவர்களுக்கு ஜூன்-9-ந் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும். ஜூன் 15-ந் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications