ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: நெஞ்சுல குத்துங்க.. நேர்மையை சந்தேகிக்காதீங்க... ப.சிதம்பரம்

ஏர்செல் மற்றும் மலேசிய நிறுவனமான மேக்சிஸ் இடையேயான ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் மூலம் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லாபமடைந்தார் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. தமது மகன் ஆதாயமடைவதற்காக நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மேக்சிஸ்-ஏர்செல் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
இதை ஏற்கெனவே மக்களவையில் மறுத்து விளக்கம் அளித்திருந்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ப.சிதம்பரம் விளக்கம் அளிகக் வலியுறுத்தியிருந்தனர்.
நெஞ்சில் குத்துங்க...
இதனால் இன்று மாநிலங்களவையில் ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ இந்த விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த விதமான தொடர்பும் இல்லை. எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் எப்போதும் எனது குடும்பத்தினருக்கு பங்குகள் இருந்ததில்லை. எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் எங்களுக்கு எப்போதும் தொடர்பும் இருந்ததில்லை. வேண்டுமெனில் நெஞ்சில் குத்துங்கள்.. நேர்மையை சந்தேகிக்காதீங்க என்றார்.
அப்போது அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், பாஜக தலைவர் அருண்ஜேட்லி உள்ளிட்டோர் எழுந்து சிதம்பரத்தின் விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications