தொடரும் கோடை மழை- அக்னி வெயிலின் அனல் குறையும் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ததால் அக்னி வெயிலின் தாக்கம் சற்றே குறைந்திருக்கிறது.

கோடையின் உச்சமாக கத்திரிவெயில் அல்லது அக்னி வெயில் கருதப்படுகிறது. கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்தது. ஒவ்வொருநாளுமே 100 டிகிரி வெப்பம் பதிவாகி வந்தது.

இந்த உக்கிரத்தின் உச்சத்தில் இருந்து விடுதலை கொடுப்பது போல தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வறுத்தெடுத்த வெயிலிலிருந்து சற்றே இது ஆறுதலை தந்தது.

சென்னையிலும் கூட வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் ஒருவித குளிர்ச்சியான காலநிலை நீடித்தது. இன்றும் அதே நிலை நீடித்து வருகிறது.

இந்த வித்தியாசமான காலநிலைக்கு, வளிமண்டத்தில் ஏற்படும் வெப்ப சலனமே காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் சில இடங்களில் மழை தொடரக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பெருந்துறை, ஊட்டியில் தலா 3 செ.மீ. மழையும், வால்பாறையில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

வெப்பநிலை அளவு

சென்னையில் இதமான காலநிலை இருந்தபோதும் வெயிலின் அளவானது 100 டிகிரி வரை பதிவாகி இருந்தது. இதேபோல் வேலூர் மற்றும் கடலூரிலும் 100 டிகிரி வெப்பம் இருந்தது. மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, புதுச்சேரியில் 98 டிகிரியும பதிவாகி இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+