மதுரை ஆதீனத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு: நித்யானந்தா

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
40 இந்து அமைப்புகளை உள்ளடக்கி மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவித ஆதாரமும் இன்றி ஆதீனம் பற்றி அவதூறு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆதீன மடத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும். குறிப்பிட்ட வார இதழ் மற்றும் தொலைக்காட்சியின் தூண்டுதலினால் மடத்திற்கு எதிராக அவதூறு பரப்புவது இறுதியில் தோல்வியில் தான் முடியும் என்றார்.
ரஞ்சிதா விவகாரம் பெரிதானபோது நான் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்று நித்யானந்தா கூறியிருந்தார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்தபோதும் நான் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, ஆன்மீகமானவன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று நித்யானந்தா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications