பிரான்சின் புதிய அதிபராக ஹோலண்ட் இன்று பதவியேற்கிறார்

பிரான்சில் சர்கோசி அதிபராக இருந்து வந்தார். அண்மையில் நடைபெற்ற 2 கட்ட தேர்தலிலும் ஹோலண்ட்தான் வென்றார். இதையடுத்து அவர் அதிபராக இன்று பொறுப்பேற்க உள்ளார்.
பாரீஸின் எல்ஷீ அரண்மனையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். பதவியேற்று முடித்த சில மணி நேரங்களிலேயே அவர் ஜெர்மனுக்குப் பயணமாகிறார். ஜெர்மனுக்கு செல்லும் முன்பாக புதிய பிரதமர் பெயரையும் ஹோலண்ட் அறிவிக்க உள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்சும் ஜெர்மனும் மிகப் பெரிய கூட்டு நாடுகள். ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கெலுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். ஜெர்மன் பயணத்தைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்க இருக்கும் சீர்திருத்தங்கள் எவை என்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் காத்திருக்கிறது. பிரான்சின் நிதிப் பற்றாக்குறையை எப்படி எதிர்கொண்டு அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப் போகிறார் என்பதற்கு ஆவலாக தொழில்துறையினரும் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications