ஹாய் குட்டீஸ்! உங்க சம்மர் ஹாலிடே எப்படி இருந்தது..?: நல்ல கட்டுரைக்கு பரிசு உண்டு!

சம்மர் முடிஞ்சாச்சு, ஊருக்குப் போய்ட்டு வந்தாச்சு. அடுத்து ஸ்கூலுக்குப் போகனும், மாமூல் வாழ்க்கைதான், மிஸ்ஸுங்களைப் பார்க்கனும், புது பிரண்ட்ஸ்களை சேர்க்கனும். அதுக்கு முன்னாடி ஒரு சின்னதா ஒரு பேச்சு பேசுவோமா...
சம்மருக்கு ஆளாளுக்கு ஒரு ஊருக்குப் போயிருப்போம். ஜாலியா சுத்திப் பாத்திருப்போம். நம்மூரு வெயிலை விட எந்த ஊரில வெயில் கம்மியா இருக்கோ அங்க போய ஆற ஆமர பலதையும் சுத்திப் பாத்திருப்போம். மறக்க முடியாத அனுபவம் கிடைத்திருக்கும், சந்தோஷம் குவிந்திருக்கும். ஜாலியான மன நிலை இன்னும் மனசை விட்டு அகலாமல் இருந்திருக்கும்.
உங்க டாடி, மம்மியை விட உங்களுக்குத்தான் இந்த சம்மர் வெகேஷன், செம ஜாலியாக, திரில்லிங்காக, உற்சாகமாக இருந்திருக்கும். உல்லாசமாக அனுபவித்திருப்பீர்கள்.
நீங்க போன இடத்தைப் பத்தி சி்ன்னதா ஒரு கட்டுரையா எழுதி அனுப்பி வையுங்க. நீங்க போன இடம், அந்த இடத்தில நீங்க சந்தித்த அனுபவங்கள், ஜாலியான தருணங்கள் என எல்லாவற்றையும் எழுதலாம். கூடவே நீங்க போன இடத்துல எடுத்த புகைப்படங்களையும் சேர்த்து விடுங்க. அட்டகாசமான அனுபவ கட்டுரைக்கு அருமையான பரிசும் கொடுக்கப் போகிறது ஒன்இந்தியா தமிழ்.
போன இடத்துல உங்களுக்கு கசப்பான அனுபவமும் நேர்ந்திருக்கலாம். எதுவா இருந்தாலும் எழுதி அனுப்புங்க.. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உங்களது அனுபவங்களை எழுதலாம்.
நீங்கதான் எழுத வேண்டும் என்றில்லை. நீங்க சொல்லச் சொல்ல உங்க அப்பா, அம்மா கூட எழுதலாம், தப்பில்லை. அடடே என்று விழி விரிய வைக்கிற அனுபவங்களை எழுத்தில் வடிப்பவர்களுக்கு மிக அழகான பரிசுகள் காத்திருக்கின்றன. அத்தோடு உங்களது கட்டுரைகள் ஒன்இந்தியா தமிழ் இணையத்தில் பிரசுரிக்கப்படும்.
அப்புறம் என்ன கீபோர்டுல கை வையுங்க, கடகடவென்று அனுபவங்களை அடிச்சு அனுப்புங்க...!
உங்களது கட்டுரையை [email protected] என்ற இ-மெயிலுக்கு அனுப்பவும்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications