அமெரிக்கா: ஹோமோ.. மாணவன் தற்கொலை- தமிழக மாணவருக்கு 30 நாள் சிறை

தருண் ரவி (வயது 20) கடந்த 2010ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்தார்.
தருண் ரவியின் அறையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டெய்லர் கிளமென்டி என்ற மாணவரும் தங்கி படித்து வந்தார். இவர் வேறு நபருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை தருண் ரவி தனது வெப் கேமரா மூலம் அவருக்கு தெரியாமல் படம் பிடித்தாகவும், அது குறித்து டிவிட்டர்' இணையதளத்தில் தகவல் வெளியிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
அந்த வீடியோ படத்தை பார்த்து மனவேதனையும், அவமானமும் அடைந்த கிளமென்டி தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து தருண் ரவி மீது நியூஜெர்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் கடந்த 16ம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் தருண் ரவிக்கு 30 நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தருணின் தந்தை ஒரு சாப்ட்வேர் என்ஜினியர். இவர் 15 ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.
2010ம் ஆண்டு 18 வயது நிரம்பிய தருண் ரவி ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
-
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications