புதுக்கோட்டை இடைத்தேர்தல்: ஐ.ஜே.கே. வேட்பாளர் கே.பி.என்.சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.பி.என்.சீனிவாசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கே.பி.என்.சீனிவாசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அறிவித்தார்.
அதன்படி கே.பி.என்.சீனிவாசன் புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் முத்துகுமாரியிடம் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவை அக்கட்சி தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் 32 அமைச்சர்கள் உள்பட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். அந்த குழு நேற்று புதுக்கோட்டை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திக் தொண்டைமான் நேற்றும், தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் கடந்த 16ம் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications