பாஜக-நிதின் கத்காரியின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொறுப்பு என்பது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உரியது. தொடர்ந்தும் ஒருவர் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது. இடைவெளிவிட்டுத்தான் பதவியேற்க முடியும்.
நிதின் கத்காரியைப் பொறுத்தவரையில் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா, அருண்ஜேட்லி, யஷ்வந்த் சின்ஹா எனப் பலரும் கத்காரி மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும்கூட வெளிநாடு வாழ் தொழிலதிபருக்கு ராஜ்யசபா எம்.பி பதவியை தாரை வார்க்க முயற்சித்தது, இந்த குழப்பத்தால் மூத்த பாஜக தலைவர் அலுவாலியா தோற்றது, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என அழைக்கப்படுவோரில் ஒருவரான மோடிக்கு செக் வைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலை களமிறக்கியது. உத்தரப்பிரதேசத்தில் மோடியின் தீவிர எதிர்ப்பாளரான சஞ்சய் ஜோஷியை தேசிய செயலராக்கியது, கர்நாடக பாரதிய ஜனதாவின் எதியூரப்பாவுக்கு எதிரான அனந்தகுமாரின் கலகங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது என கத்காரியால் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள்.
இதனால் மும்பை தேசிய செயற்குழுக் கூடத்தில் கத்காரி தொடர்ந்தும் தலைவராக நீட்டிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி இருந்தது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆதரவு இருந்ததால் மேலும் 3 ஆண்டுகாலத்துக்கு தலைவர் பதவியில் கத்காரி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அக்கட்சியின் சட்டத்தில் திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மீண்டும் சஞ்சய் ஜோஷி
தேசியச் செயலர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட சஞ்சய் ஜோஷி, 2014- ம் ஆண்டு நாசிக் தொகுதியில் போட்டியிட உள்ள கத்காரியின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட கட்சி அனுமதி அளித்துள்ளது. முதல் முறையாக கத்காரி தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications