கானா பாட்டு பாடுவதில் தகராறு- இளைஞர் பீர்பாட்டிலால் குத்திக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகரில் கானா பாட்டு பாடுவதில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரைச் சேர்ந்த குமாரும் அவரது நண்பரான கொடுங்கையூர் வினோத்தும் நேற்று டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றனர். இரவு வரை தொடர்ந்து குடித்துக் கொண்டே இருந்தனர்.

பின்னர் புரோட்டா வாங்கிக் கொண்டு மொட்டை மாடி ஒன்றில் அமர்ந்து சென்னையின் ஆதிகாலத்து பாடல்வடிவமான கானா பாடல்களை உரத்த குரலில் பாடி வந்திருக்கின்றனர்.

அப்போது இருவரும் தங்களுக்கு இடையே ஒரு போட்டியை வைத்திருக்கின்றனர். இருவருமே நன்றாக கானா பாடக்கூடியவர்கள் என்பதால் யார் கானாவை சிறப்பாகப் பாடுவது என்று போட்டி வைத்துள்ளனர்.

இதில் தகராறு ஏற்பட்டு குமாரின் கழுத்தை பீர்பாட்டிலால் வினோத் குத்தி கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொலை செய்த வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+