மேட்டூரில் மே 31 முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

Mettur Thermal Power Plant
மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பணிகள் மீண்டும் மே 31-ந் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மே 10-ந் தேதி நள்ளிரவில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மிகப் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நிலக்கரி கையாளும் இடம் மேட்டூர் அனல் மின் நிலைய பணியாளர்களால் இரவு பகலாக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அனல்மின் நிலையம் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகிறது.

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்க பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 50 விழுக்காடு பணிகள் நிறைவடைந்து விட்டது. இதனால் வரும் மே 31-ந் தேதி மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+