நிதின்ஜி....அத்வானிஜி.... சுஷ்மாஜி.... பாஜகவில் ஐக்கியமாகிறார் ஜெயபிரதாஜி?

Subscribe to Oneindia Tamil

Jaya Prada
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்து அமர்சிங்குடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப் போவதாக நடிகையும் எம்.பியுமான ஜெயபிரதா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜெயபிரதா தெலுங்குதேசம் கட்சியில் கலந்து தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சந்திரபாபு நாயுடுவால் ராஜ்யசபா எம்.பியானார்.

நாயுடுவுடன் தகராறு ஏற்பட அமர்சிங் உதவியுடன் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியமானார். உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் இருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயபிரதா. ஆனால் சமாஜ்வாதி கட்சியின் ஆசாம்கானுக்கும் அவருக்கும் ஆகாமல் போக அப்புறம் என்ன தனிக் கட்டைதான்!

இப்பொழுது ஏதாவது ஒரு கட்சியில் இணைவது என்ற முடிவில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் நிதின்கத்காரியை ஜெயபிரதா சந்தித்துப் பேசினார். இந்நிலையில் சமாஜ்வாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் தனது மற்றொரு அரசியல் குருவான அமர்சிங்கையும் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜெயபிரதா, நிதின்ஜி, அத்வானிஜி, சுஷ்மாஜி ஆகியோர் மீது ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன்.. ஊடகங்கள் நான் பாஜகவில் சேரப்போவதாக எழுதி வருவது பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

ஜெயபிரதாவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் முகமான ஆசாம்கான், அவரது முடிவு ஆச்சரியப்படக் கூடிய ஒன்று அல்ல என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+