சந்தேகப்பட்டு கேள்வி கேட்ட மனைவியை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்!
ராமந்தபுரம்: நடத்தையில் சந்தேகப்பட்டு கேள்வி கேட்ட மனைவியை தலையில் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் ஆட்டோ டிரைவர். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் காளீஸ்வரன். இவரது மனைவி புஷ்பவல்லி. 28 வயதான புஷ்பவல்லிக்கு காளீஸ்வரனின் நடத்தை குறித்து சந்தேகம் வந்துள்ளது. வேறு எந்தப் பெண்ணுடனாவது தொடர்பு இருக்குமோ என்று அவருக்கு கவலை வந்துள்ளது.
இதனால் அடிக்கடி அவருடன் சண்டை பிடித்து வந்தார். அவரது தொடர் கேள்விகளாலும், அடிக்கடி சண்டை பிடித்ததாலும் பெரும் கோபமடைந்தார் காளீஸ்வரன்.
இந்த நிலையில் வழக்கம் போல சம்பவ தினத்தன்றும் மோதல் மூண்டது. அப்போது வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மனைவி தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் புஷ்பவல்லி பரிதாபமாக இறந்து போனார்.
தனது மகளை அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மருமகன் காளீஸ்வரன் குறித்துப் போலீஸில் புகார் கொடுத்தார் புஷ்பவல்லியின் தந்தை. இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் காளீஸ்வரனைத் தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications