சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஜெகன் மோகன் ரெட்டிக்கு 14 நாள் ஜெயில்!

சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக ஜெகன் மோகன் ரெட்டி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் இன்றுகாலை பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் ஜெகன் மோகன் ரெட்டியை 14 நாள் சிறைக் காவலில் வைக்க சிபிஐ நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட்டுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வரப்பட்ட தகவல் பரவியதும் அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளாக கோர்ட் வளாகத்திற்கு வெளியே கூடினர். இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. ஜெகனின் வக்கீல் விஜய் சாய் ரெட்டியுடன், ஜெகனின் மனைவி பாரதி ரெட்டி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கோர்ட்டுக்குள் சென்றார்.
கடையடைப்புக்கு ஆதரவில்லை
முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டி கைதைக் கண்டித்து இன்று ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு அவரது கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்திற்குப் பெரிய அளவில் ஆதரவில்லை. தெலுங்கானா பகுதியில் சுத்தமாக ஆதரவில்லை. தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிரானவர் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கடப்பா நகரிலும், ராயலசீமா, கடலோர ஆந்திர மாவட்டங்களிலும் லேசான பதட்டம் காணப்படுகிறது. இருப்பினும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. சில இடங்களில் கல்வீச்சு, பஸ்கள் மீது தாக்குதல் ஆகியவை நடந்துள்ளன.
ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு
தெலுங்கானா பகுதிக்குட்பட்ட ஹைதராபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கடையடைப்பால் எந்தவித பாதிப்பும் இல்லை. பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications