புதுக்கோட்டை இடைத் தேர்தலில் 20 பேர் போட்டி!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக உள்பட மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதிக்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட 31 வேட்பாளர்கள் சார்பில 34 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வேட்பு மனு பரிசீலனையின்போது 25 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதையடுத்து மனுக்களை வாங்க இன்றுதான் கடைசி நாள். வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்தபோது 5 பேர் மனுக்களை திரும்பப் பெற்றிருந்தனர்.
இதையடுத்து இடைத் தேர்தலில் மொத்தம் 20 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications