பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த திருமா
சென்னை: மத்திய அரசு ஒரேயடியாக பெட்ரோல் விலையை உயர்த்தியதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி கடந்த 23ம் தேதி உத்தரவிட்டது. இந்த விலை உயர்வை பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நாளை அதிமுகவும், நாளை மறுநாள் திமுகவும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சென்னை தீவுத்திடலில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு மெமோரியல் ஹால் வரை ஊர்வலமாக சென்றார். அவருடன் அக்கட்சி நிர்வாகிகளும் மாட்டு வண்டியில் பயணித்தனர்.
ஊர்வலம் மெமோரியல் ஹாலை அடைந்ததும் அதன் முன்பு திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் 18 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல் மீதான வரியை மாநில அரசு குறைத்தால் விலை ஓரளவு குறையும். எனவே, மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications