10க்கு 10 அடி அறையில் படுத்து உறங்கும் ஜெகன்!
ஹைதராபாத்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, குறுகலான சிறை அறையில் படுத்து உறங்குவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்துக் குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள சன்சல்குடா மத்திய சிறையி்ல் கைதி எண் 6093 வழங்கப்பட்டு ஜெகன் மோகன் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் பெரும் பணக்காரர்கள் வாழும் பஞ்சரா ஹிப்ஸ் பகுதியி்ல 32 ஏக்கரில் உள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்த ஜெகன், தற்போது சிறையில் 10க்கு 10 அடி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது வெயில் காலம் என்பதால் சிறை அறைகளில் கடும் வெப்பமாக உள்ளது. இதனால் குறுகலான அறையில் படுத்து உறங்க, ஜெகன் மிகவும் சங்கடப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது
நாட்டின் மிகவும் பணக்கார எம்.பி.யான ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிறையில் சிறப்பு அறை ஒதுக்கி உள்ளோம். 10க்கு 10 அடி அளவு கொண்ட இந்த அறையில் கழிவறை வசதி, மெத்தை, தலையணை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள டிவி வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே பார்க்க முடியும் என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications