சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இன்றுடன் தீரும்: ஜெயலலிதா

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் நிலவி வரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டினை நீக்குவது குறித்து இன்று பிற்பகல் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மங்களூரில் உள்ள மங்களூர் ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பணிகள் கடந்த 10 நாட்களாக முடங்கிப் போயிருந்ததாலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வர வேண்டிய டீசல் வராததாலும், பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை அதிகரித்துள்ளதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொச்சியிலிருந்து கப்பல்கள் மூலம் 67,000 கிலோ லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவை இன்று பிற்பகல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த பெட்ரோல் மற்றும் டீசலை சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கும் உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 கிலோ லிட்டர் டீசல் பெங்களூரிலிருந்து சாலை வழியாக சென்னைக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு கூடுதலாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
சென்னைக்கு நாளொன்றுக்கு சுமார் 2,100 கிலோ லிட்டர் பெட்ரோலும், 2,500 கிலோ லிட்டர் டீசலும் தேவைப்படுகிறது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 67,000 கிலோ லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் உடனடியாக பெட்ரோல் பங்குகளுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சென்னை நகரில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இன்று முதல் தீர்ந்துவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்- நீதிமன்றத்தில் வழக்கு:
இதற்கிடையே, வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னையில் நிலவிவரும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல் விலையை உயர்த்தியது மட்டுமின்றி செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இதில் நீதிமன்றம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications