முல்லைப் பெரியாறு அணையில் தமிழக காவல்துறை: ஜெயலலிதாவின் எச்சரிக்கைக்கு பழ. நெடுமாறன் வரவேற்பு
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்தாவிட்டால் தமிழக காவல்துறையை நிறுத்த நேரிடும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை பரிசோதிக்க உச்சநீதிமன்றம் அமைத்த ஆலோசனைக்குழு அணையின் 8 இடங்களில் துளையிட்டு சோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாக கூறிவிட்டது. அந்த துளைகளை மூடவிடாமல் தமிழக அதிகாரிகளை கேரள காவல்துறையினர் தடுத்து திருப்பியனுப்பியதை கண்டிக்கும் வகையில், பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், கேரள அரசு அடாவடியாக நடந்தகொள்வதை தடுக்கும் வகையில் அணையின் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் தமிழக காவல்படையை அனுப்ப நேரிடும், என எச்சரிக்கை விடுத்துள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் துணிவை வரவேற்று பாராட்டுகிறேன்.
பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி விட்டது என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது. முதலமைச்சர் எச்சரித்துள்ள படி தமிழக காவல்துறையை பெரியாறு அணை பகுதியில் உடனடியாக நிறுத்தவேண்டும். பெரியாறு அணையிலும், அருகிலுள்ள பேபி அணையிலும் கேரள அரசால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அனைத்து மராமத்து பணிகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அணைப்பகுதியில் தமிழகம் குத்தகை செலுத்தி வருகிற நிலப்பரப்பில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றும் பணியினையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications