புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 'அம்மா'வை ஆதரிக்கும் இந்திய தேசிய முஸ்லீம் லீக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரிக்கப் போவதாக இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது என்று சென்னையில் நடந்த இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் ஒய். ஜவஹர் அலி தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு,

தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி, மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து அறிவித்து, தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதற்கு பாடுபடும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த, நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி தனது முழு ஆதரவையும் அதிமுகவுக்கு அளித்து வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபடும்.

இது தவிர அம்பேத்கார் முன்னணி கழகம், சென்னை துறைமுக எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, அகில இந்திய அம்பேத்கார் மக்கள் கழக தலைவர் இரா.மாமல்லன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+