மியான்மரில் ஆங்சான் சூகியுடன் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

மியான்மருக்கு மன்மோகன்சிங் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். அந்நாட்டு அதிபர் தெய்ன் சீனை நேற்று மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்போது இரு நாடுகள் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதைத் தொடர்ந்து ஆங்சான் சூகியை யாங்கூனில் இன்று மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது ஆங்சான் சூகியை இந்தியாவுக்கு வருகை தருமாறு சோனியா காந்தி சார்பாக மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்தார்.
சூகியுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, மியான்மரின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சூகியை மரியாதை நிமித்தமாக பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications