பி.இ. மாணவர்கள் தற்கொலையை தடுக்க ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர்கள் பயிற்சி
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர்கள், உளவியல் நிபுணர்களைக் கொண்டு கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவியர் படிக்க முடியாவிட்டால், தேர்வில் பெயிலாகிவிட்டால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அண்மையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர் மணிவண்ணன் 24 பேப்பர்களில் பெயிலானதால் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த சில நாட்களில் அதே கல்லூரியில் படித்த தைரிய லட்சுமி என்ற மாணவி செமஸ்டரில் பெயிலாகிவிடுவோமோ என்ற பயத்தில் தூக்கில் தொங்கிவிட்டார்.
இது போன்று மாநிலத்தில் பல மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தற்கொலைகளை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இருந்து தலா ஒரு ஆசிரியருக்கு இன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள், சினேகா தற்கொலை தடுப்பு மையம் ஆகியவை இணைந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.
முதல் கட்டமாக இன்று 80 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே போன்று 3 முறையாக 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். அதன் பிறகு மாணவர்களின் மனோதைரியத்தை அதிகரிக்க அவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications