இந்திய பொருளாதார வளர்ச்சி 5.3% ஆக சரிந்தது.. 9 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் வீழ்ச்சி!

கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மாபெரும் சரிவாகும்.
ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களால் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. முன்னதாக இந்தக் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது 5.3 சதவீதம் அளவுக்கு தேய்ந்துவிட்டது.
மேலும் 4வது காலாண்டில் வேளாண்துறையில் உற்பத்தி 1.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தி -3 சதவீதம் சரிவடைந்துள்ளது.
2011-12ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது 2010-11ம் நிதியாண்டை விட 1.9 சதவீதம் குறைவாகும்.
நடப்பு காலாண்டிலும் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியிலேயே இருக்கும் என்று தெரிகிறது.
பங்குச் சந்தை பெரும் சரிவு:
பொருளாதார வளர்ச்சி சரிவு விவரம் வெளியானதையடுத்து இன்று இந்திய பங்குச் சந்தைகளும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 54 புள்ளிகள் குறைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் 9 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்த இந்தியா, இப்படி 5.3 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications