நிதின் கத்காரியால் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தி: அத்வானி தாக்கு

சமீபத்தில் அத்வானியின் அதிருப்தியையும் மீறி கட்காரியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்சின் தலையீடு காரணமாக கட்காரிக்கு இந்தப் பதவி நீட்டிப்பு கிடைத்தது.
ஏற்கனவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தரப்பும் முக்கியத்துவத்தால் கட்சியில் அத்வானியின் முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில், இப்போது கட்காரியும் அத்வானியின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜக தேசிய அளவில் பந்த் நடத்திக் கொண்டிருந்த நிலையில் அத்வானி தனது பிளாக்கில் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்கள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகள் மற்றும் ஊழல்கள் அதன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நமது செயல்பாடுகளால் நம் மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
கட்சியில் இப்போது தன்னம்பிக்கை மிகக் குறைவாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த தோல்வி, மாயாவதியால் நீக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளை நமது கட்சியில் சேர்த்தது, கர்நாடகம் (எதியூரப்பா ஊழல் விவகாரம்), ஜார்க்கண்ட்டில் (எம்பிக்கள் விலை பேசப்பட்டது, ராஜ்யசபா தேர்தலில் கட்சிக்கே சம்பந்தமில்லாத ஒருவர் நிறுத்தப்பட்ட) கட்சி விவகாரங்கள் கையாண்ட விதம் ஆகியவற்றால் மக்கள் நம் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.
ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்துக்கு இந்த விஷயங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டன.
நானும் ஒரு முன்னாள் பத்திரிக்கையாளன் என்ற முறையில் மக்களின் உணர்வுகளை புரிந்து வைத்துள்ளேன்.
1984ம் ஆண்டில் பாஜகவுக்கு 2 எம்பிக்களே இருந்தனர். தற்போது குறிப்பிடத்தக்க அளவில் எம்பிக்களைப் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் பணிகள் மிகச் சிறப்பாக உள்ளன என்று எழுதியுள்ளார் அத்வானி.
அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் இருவரும் கத்காரிக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை வகுத்தது, மாயாவதியால் நீக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளை கட்சியில் சேர்த்தது, கர்நாடகா, ஜார்க்கண்ட் விவகாரங்களைக் கையாண்டது எல்லாமே கத்காரி தான்.
எனவே, அத்வானி கத்காரி மீது தான் இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications