மகனை சரியாக வளர்க்கவில்லை- ஜெகனின் தாயார் மீது சந்திரபாபு நாயுடு தாக்கு
ஹைதராபாத்: இமாலய தவறு செய்த மகனுக்காக விஜயலட்சுமி நீலிக் கண்ணீர் வடித்து பிரசாரம் செய்கிறார். இதைப் பார்த்து ஆந்திர மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏழுர் தொகுதியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியை குறைகூறியும் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து ஜெகனை கைது செய்தனர்.
சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு நியாயமானது. சிபிஐயின் இந்த செயலை ஜெகனின் தாயார் விஜயலட்சுமி குறை கூறி வருகிறார். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சாதாரண மனிதர்கள் ஜெகனின் ஊழலை சகித்துக்கொள்ள மாட்டார்கள். விஜயாம்மா தனது மகனை சரியாக வளர்க்கவில்லை. சரியாக வளர்த்திருந்தால் ஜெகன் இந்த அளவுக்கு சொத்து குவித்திருக்க மாட்டார்.
மகனின் தவறுகளை மறைக்கவே விஜயலட்சுமி நீலிக் கண்ணீர் வடித்து பிரசாரம் செய்கிறார். இதைப் பார்த்து ஆந்திர மக்கள் ஏமாற மாட்டார்கள். அதேபோல் ஜெகன் சொத்துக் குவிப்பதற்கு காங்கிரசும் உதவியாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் இன்றைக்கும் ஜெகனுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications