கட்சி துரோகிகளை பட்டியலிட்டு கொன்றதாக பேசிய சிபிஎம் செயலாளர் தலைமறைவு
திருவனந்தபுரம்: கட்சி துரோகிகளை பட்டியல் போட்டு கொன்றதாக பேசி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் மணி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகரன் என்பவர் சில வாரங்களுக்கு முன் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது. சந்திரசேகரன் கொலை சம்பவம் மூலம் கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இடு்க்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாலரான எம்.மணி தொடுபுழாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், கட்சி துரோகிகளை பட்டியல் போட்டு கொன்றதாக பேசினார்.
மணியின் பேச்சு கேரளாவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே மணி மீது தொடுபுழா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் மணி விரைவில் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் நேற்று முதல் மணி திடீரென மாயமாகிவிட்டார். அவரது செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து மணி தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications