கருணாநிதி பிறந்தநாள் கவிதை போட்டி -வென்றவர்களுக்கு வைரமுத்து பரிசு

இது குறித்து திமுக தலைமை இலக்கிய அணியின் தலைவர் கவிஞர் கா.வேழவேந்தன், செயலாளர்கள் கவிதைப் பித்தன், தஞ்சை கூத்தரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திமுக தலைமை இலக்கிய அணி மரபுக் கவிதைப் போட்டி ஒன்றினை அறிவித்திருந்தது. தமிழகம், பெங்களூர், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் வாழும் கவிஞர்கள் 250 கவிதைகளை அனுப்பியிருந்தனர்.
நடுவர்கள் கா.வேழவேந்தன், கவிதைப்பித்தன், கயல் தினகரன் ஆகியோர் கவிதைகளை மதிப்பீடு செய்து ஒருமித்த கருத்தோடு பரிசுகளுக்குரிய கவிஞர்களை தேர்வு செய்தனர்.
அதன்படி, முதல் பரிசு ரூ.10,000 கவிஞர் கவியரசன், 2ம் பரிசு ரூ.5,000 கவிஞர் ஆ.குமாரசாமி, 3ம் பரிசு ரூ.3.000 கவிஞர் க.பாவை, ஆறுதல் பரிசு ரூ.2,000 பாவலர் ப.எழில்வாணன் ஆகியோர் பெறுகின்றனர்.
இந்தக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜூன் 4ம் தேதி மாலை 5.30 மணியளவில், தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்த நாள் விழாவில், கவிஞர் வைரமுத்து பரிசுகளை வழங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications