சூரியனைக் கடக்கும் வெள்ளிக் கிரகம்: 6ம் தேதி காணலாம்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சூரிய வட்டத்தின் ஊடாக வெள்ளிக்கிரகம் நகர்ந்து செல்வதை வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு என்கிறோம். அந்த நேரத்தில் வெள்ளிக்கிரகம் ஒரு சிறிய புள்ளி போல சூரியனின் முன்பாக ஊர்ந்து செல்வது போல காணலாம்.
புதன் மற்றும் வெள்ளிக்கிரகங்களின் சுற்றுப்பாதைகள் பூமியின் சுற்றுப்பாதையின் உட்புறமாக அமைந்துள்ளன. எனவே இந்த இரண்டு கிரகங்கள் மட்டுமே சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வர இயலும்.
சூரியக்கடவு என்பது அரிய வானவியல் நிகழ்வாகும். வெள்ளியின் சூரிய கடப்பு, புதனின் சூரிய கடப்பு நிகழ்வை விட மிகவும் அரியதாகும். சராசரியாக ஒரு நூற்றாண்டில் 13 முறை புதனின் சூரிய கடப்பு நடைபெறும். ஆனால் வெள்ளியின் சூரிய கடப்போ 243 ஆண்டுகளுக்கு 4 முறையே நிகழ்கிறது. இவை இரட்டிப்பாக அதாவது 8 ஆண்டுகள் இடைவெளியில் அமைந்த இரட்டை நிகழ்வுகளாக நிகழும். இந்த இரட்டை நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட காலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டது ஆகும்.
அரிய நிகழ்வான சூரியக்கடப்பு கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி நடைபெற்றது. அடுத்த சூரியக் கடப்புகள் அடுத்த மாதம்(ஜூன்) 6ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு 2117ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2125ம் ஆண்டு டிசம்பரிலும் நடைபெறும். கடந்த 1761, 1874, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த சூரிய கடப்பு நிகழ்வுகளை இந்தியாவில் முழுமையாக பார்க்க முடிந்தது.
இந்தியாவில் முழுமையாக பார்க்க இயலாது
வருகிற ஜூன் 6-ந்தேதி நடைபெற உள்ள சூரியனை வெள்ளிக்கிரகம் கடக்கும் நிகழ்ச்சி சூரிய உதயத்திற்கு முன்பே தொடங்கிவிடும். அதனால் முழுமையாக இந்த நிகழ்வை இந்தியாவில் இருந்து தெரியாது.
ஆனால் ஹவாய், வட அமெரிக்காவின் வடமேற்கு பகுதி, மேற்கு பசிபிக், வடக்கு ஆசியா, ஜப்பான், கொரியா, கிழக்கு சீனா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதி, நியுசிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக காணலாம். தென் அமெரிக்கா பகுதிகளில் வெள்ளியின் சூரியக்கடப்பு முடிவதற்கு முன்பே சூரியன் மறைந்துவிடும்.
இந்தியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகளில் சூரியன் உதயமாகும் முன்னரே சூரியனை வெள்ளி கடக்கும் நிகழ்வு தொடங்கும்.
சென்னை, மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் காலை 5.50 மணி முதல் காலை 10.22 மணி வரை காணலாம். தொலை நோக்கி கொண்டு சூரியனின் பிம்பத்தை வெண் திரையில் விழச் செய்து பார்த்தால் சூரியனின் குறுக்கே கறுப்பு புள்ளி போன்ற தோற்றத்துடன் வெள்ளிக்கிரகம் கிழக்கில் இருந்து மேற்காக கடந்து செல்வதை காணலாம். வெள்ளியுடன் சூரியப்புள்ளிகளும் தெரியும். ஆனால் வெள்ளியை காட்டிலும் சூரியப்புள்ளிகள் சற்று ஒளியுடன் இருப்பதை காணலாம்.
சூரியனை வெள்ளி கடக்கும் போது வெறும் கண்ணாலோ, தொலைநோக்கி, பைனாக்குலர் போன்ற உருப்பெருக்கி கொண்டா சூரியனை நேரடியாக பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் பார்வை இழக்க நேரிடும். சூரியனின் பிம்பத்தை ஒரு வெண் திரையில் விழச் செய்து அதை காணலாம்.
ஒரு 5 மில்லி மீட்டர் அளவிலான துளையை ஒரு அட்டையில் ஏற்படுத்தி அதன் வழியே ஒரு கண்ணாடியின் உதவி கொண்டு சூரிய ஒளியை பாய்ச்சினால் அட்டையின் மறுபக்கத்தில் சற்று தூரத்தில் சூரியனின் பிம்பம் உருவாகும். அங்கு வெள்ளை நிற அட்டையை பயன்படுத்தி சூரியனின் பிம்பத்தை காணலாம். இதில் சிறு புள்ளி போல வெள்ளிக்கிரகம் நகர்வதை பார்க்கலாம்.
தொலை நோக்கி, பைனாக்குலர் வழியே வெளிவரும் சூரியனின் பிம்பத்தை திரையில் விழச்செய்து காணலாம். வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்தும் 14ம் எண் ஒளி வடிகட்டி கொண்டும் சூரியனை பார்க்கலாம்.
பிர்லா கோளரங்கத்தில் வரும் 6ம் தேதி பொதுமக்கள் சூரியனை வெள்ளிக்கிரகம் கடப்பதை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைநோக்கி மூலம் சூரிய பிம்பத்தை திரையில் விழச்செய்து பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது காலை 5.45 மணி முதல் பொதுமக்கள் பார்க்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications