பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டர் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து- உளவுத் துறை எச்சரிக்கை

அமெரிக்கா நாட்டின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தி உலகமெங்கும் பிரபலமானவர் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன். இதன் பிறகு அமெரிக்க அரசால் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த ஒசாமா, பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த போது, அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் சஷில் அப்ரிடி என்பவர் தான் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த இடம் குறித்த ரகசிய தகவலை அளித்தவர். ஆனால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்.
சஷில் அப்ரிடியின் உதவியை பாராட்டி, அவரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அமெரிக்க அரசு, பாகிஸ்தானை கேட்டு கொண்டது. மேலும் அவரை குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறுமாறும் அமெரிக்க அரசு கூறியது.
ஆனால் அதற்கு சஷில் அப்ரிதி மறுத்துவிட்டதாக தெரிகிறது. தற்போது அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஷில் அப்ரிடியின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக, பாகிஸ்தான் உளவுத் துறையினர் எச்சிரிக்கை விடுத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஷில் அப்ரிடியை தீவிரவாதிகள் கடத்தி சென்று கொலை செய்யலாம் என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது.
அடியலா சிறையில் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 250க்கும் மேற்பட்டோர் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்கள். எனவே அடியலா சிறைக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications