ஹௌலாவில் 108 பேர் படுகொலை: அமெரிக்காவுக்கான சிரிய துணைத் தூதர் ராஜினாமா
கலிபோர்னியா: சிரியாவில் உள்ள ஹௌலாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 108 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கலிபோர்னியாவில் உள்ள சிரிய கௌரவ கன்சல் ஜெனரல் ஹாசம் செஹாபி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், சிரிய அரசுடனான தொடர்பையும் துண்டித்துள்ளார்.
சிரியாவில் அதன் அதிபர் பஷார் ஆசாத்திற்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த போராட்டங்களின்போது வெடித்த வன்முறைகளில் ஏற்கனவே 10,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஹௌலா என்ற இடத்தில் 108 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆகும்.
இந்த படுகொலைக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த படுகொலையை கண்டித்து கலிபோர்னியாவில் உள்ள சிரிய கௌரவ கன்சல் ஜெனரல் ஹாசம் செஹாபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஆசாத் அரசுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை காட்டிமிராண்டித் தனமானது என்று அவர் விமர்சித்துள்ளார்.
இனி தனது மருத்துவ தொழிலை கவனிக்கப் போவதாக அவர் தெரிவி்ததார். அவர் கடந்த 18 ஆண்டுகளாக இந்த பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications