உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைந்தது
Subscribe to Oneindia Tamil

பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன்பு 1 லிட்டருக்கு ரூ7.50 வரை அதிரடியாக ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைக்கப்படுவதாக எணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இப்புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications