தமிழக மக்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்..மின்வெட்டு நேரம் குறைப்பு
Subscribe to Oneindia Tamil

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் நீடிக்கும் மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை நகரில் 2 மணி நேரமாக இருக்கும் மின்வெட்டை 1 மணி நேரமாகவும் பிற மாவட்டங்களில் அமலில் இருக்கும் 4 மணி நேர மின்வெட்டை 3 மணி நேரமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய மின்வெட்டு நேரம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications