கருணாநிதியின் 89-வது பிறந்த நாள்: கடந்த முறை சிறையில், இம்முறை சென்னையில் கனிமொழி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் விழா இன்று அக்கட்சியினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னையில் இன்று காலை தமது இல்லத்தில் கேக் வெட்டி தமது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கருணாநிதி கொண்டாடினார். பின்னர் அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து சிஐடி நகரில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட கருணாநிதி பின்னர் அண்ணா அறிவாலயம் வந்து தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். திமுக முக்கிய பிரமுகர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்திருதார். தமிழக ஆளுநர் ரோசய்யாவும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். தமிழகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிந்து கருணாநிதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கருணாநிதியின் 89-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையாக 89 வகையான இனிப்புகள், தென்னம்பிள்ளைகள் என விதம்விதமான பரிசுப் பொருட்கள் கருணாநிதிக்கு வழங்கப்பட்டன.
கடந்த பிறந்த நாளின் போது கருணாநிதியின் மகள் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கனிமொழியும் இன்றைய கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் 89-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications