For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்க நாட்டை அமெரிக்கா கைப்பற்ற முயற்சிக்கிறது: இலங்கை அமைச்சர் புலம்பல்

By Mathi
Google Oneindia Tamil News

Wimal Weerawansa
கொழும்பு: இலங்கையை கைப்பற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக அந்நாட்டு அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

மாரவில என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

இலங்கையை கைப்பற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது. இந்த இலக்கை அடைவதற்காக பிரிவினைவாதிகளுடன் அது கூட்டு சேர்ந்திருக்கிறது.

இலங்கையின் பூகோள அமைவிடமும் அதன் இயற்கை வளங்களும் அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானவை, இதனால் நாட்டை சீர்குலைக்க முனையும் பிரிவினைவாத அமைப்புகளை அமெரிக்கா சார்ந்திருந்து நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறது.

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்று அமெரிக்காவும் மற்றவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்துவதற்கு இதுதான் காரணம். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் தமிழ்த் தேசியக் .கூட்டமைப்பு ஆகியவை வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிவிட்டு பிரிவினைவாதத்தை மீண்டும் விதைத்து நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றார் அவர்.

English summary
Sri Lanka Minister Wimal Weerawansa alleges that the United States wants to take over the country and is lining up with separatist forces in order to achieve its goal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X