கணக்கில் வெறும் 1,141 பேர் சதம்: மாணவர்களுக்கு என்னாச்சு?
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இந்த ஆண்டு கணக்கு பாடத்தில் வெறும் 1,141 மாணவர்கள் மட்டுமே சதம் அடித்துள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்தது. 11 லட்சத்து 68,000 மாணவ-மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தமிழகம் மற்றும் புதுவையில் பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். பழைய பாடத்திட்டத்தின் கீழ் 64, 777 பேரும், தனித் தேர்வர்களாக 19,574 பேரும் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியானது. இதில் தஞ்சை பி.ஆர். பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.11 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதியும் வெறும் 1,141 பேர் மட்டுமே கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு 12, 532 பேர் கணிதத்தில் 100க்கு 100 வாங்கியிருந்தனர். இந்த ஆண்டு சொல்ப மாணவர்களே கணிதத்தில் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 3 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர். அறிவியலில் இந்த ஆண்டு 9, 237 பேர் சதம் அடித்துள்ளனர். கடந்த ஆண்டு அறிவியலில் வெறும் 3, 677 பேர் மட்டுமே சதம் அடித்திருந்தனர். இந்த ஆண்டு சமூக அறிவியலில் 5, 305 பேர் சதம் அடித்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணக்கில் மிகவும் குறைவான மாணவர்களே 100க்கு 100 எடுத்துள்ளனர். அதேசமயம் அறிவயலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5,530 பேர் கூடுதலாக 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications