ஜெ.வை திட்டியதாக விஜயகாந்த் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்ற அதிமுக பிரமுகர்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேட்டி அளித்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு தலைவரும், வழக்கறிஞருமான வி.ஞானமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கோயம்பேட்டில் கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 504, 505(1), 506(1) ஆகிய பிரிவுகளின்படி குற்றமாகும்.
எனவே இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜயகாந்துக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்தேன். ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி தேமுதிக வழக்கறிஞர் நமோ நாராயணன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ். நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது.
ஞானமுத்து சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஞானமுத்துவின் அறிவுரையின்படி மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார். ஆனால் நமோ நாராயணன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜயபாஸ்கர் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications