தேர்தல் வழக்கில் மனு தள்ளுபடியெல்லாம் ஒரு பின்னடைவா?: ப.சிதம்பரம்

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் கடைசிவரை தோல்வி முகத்தில் இருந்து திடீரென வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கையே விசாரிக்கக் கூடாது என்று சிதம்பரம் தொடர்ந்த மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாம் உள்துறை அமைச்சர் என்பதால் தம்மை கூண்டில் ஏற்றி விசாரணை செய்யக் கூடாது என்று மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவையும் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் ப.சிதம்பரம் பதவி விலகியாக வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ப.சிதம்பரம், நாட்டின் அமைச்சராக நீடிப்பதே ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் செயல் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் காட்டமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல் வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து நாடு முழுவதும் 111 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாலேயே தமக்கு பின்னடைவு அல்ல. வழக்கை தொடர்ந்து சந்திப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications