தமிழகத்தைச் சேர்ந்த வி.எஸ். சம்பத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம்

இந்திய தேர்தல் ஆணையமானது 3 உறுப்பினர்களை கொண்ட அமைப்பு ஆகும். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் எஸ்.ஒய்.குரேஷியும், இரு தேர்தல் ஆணையர்களாக வி.எஸ்.சம்பத்தும். எச்.எஸ்.பிரம்மாவும் இருந்து வருகின்றனர். எஸ்.ஒய்.குரேஷியின் பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மூத்த தேர்தல் ஆணையரான வி.எஸ்.சம்பத்தை புதிய தலைமை தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்து உள்ளது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கும் வி.எஸ்.சம்பத் 1950-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி வேலூரில் பிறந்தார். 1973-ம் ஆண்டின் ஆந்திர பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் மத்திய மின்துறை செயலாளராக பணியாற்றினார். ஆந்திர மாநிலத்திலும், டெல்லியிலும் மேலும் சில முக்கிய பதவிகளையும் வகித்து உள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை ஆகும். இதில் எது முதலில் நிறைவடைகிறதோ அதுவரை அவர்கள் அந்த பதவியில் இருக்கலாம். வி.எஸ்.சம்பத்துக்கு 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் 65 பூர்த்தியாகும் என்பதால், அதுவரை அவர் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருப்பார். வருகிற 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இவரது தலைமையில்தான் நடைபெறும்.
நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் போன்ற முக்கிய பதவிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய குழு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அவரது யோசனையை ஏற்கெனவே மத்திய அரசு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications