ஒரு நாளைக்கு 50 கேஸ் வரலைனா... மெமோதான்: வசூல் வேட்டையைத் தடுக்க புது உத்தரவு
சென்னை: சென்னை மாநகரில் பொதுமக்களிடம் டிராபிக் போலீசார் வசூல் வேட்டை நடத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக "ஒரு நாளைக்கு கட்டாயம் 50 வழக்குகள்" வந்தாக வேண்டும் என்று வினோத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தைக் கவனிக்கிறதா? 50 கேஸ் போட்டு ஸ்பாட் பைன் வாங்குவதா? என்று டிராபிக் போலீசார் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உயர் அதிகாரிகளோ வினோத உத்தரவுக்கு சொல்லும் வியாக்யானம் தலை சுற்ற வைக்கிறது.
போக்குவரத்து போலீசார் காலை 7 மணி முதல் இரவு 11 மணிவரை பணியில் உள்ளனர். இவர்களில் பலரும் வசூல் வேட்டையில்தான் மும்முரமாக இருக்கின்றனர்.
தற்போது பணி செய்கிறார்கள். இடையில் இவர்களுக்கு 2 மணி நேரம் மதிய சாப்பாடு ஓய்வு. சப்-இன்ஸ்பெக்டர்கள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதைவிட, வசூல் வேட்டையில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள். இதனை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு 50 வழக்கு போடனும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
அதாவது காலையிலும், மாலையிலும் போக்குவரத்து நெரிசலான நேரமான 4 மணி நேரம் இவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டாக வேண்டும். மீதி 8 மணி நேரத்தில் 1 மணி நேரத்தில் 6 வழக்குகள் போட்டால்தான் 50 கேஸ் என்ற கணக்கை எட்ட முடியும்.
4 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும், 8 மணி நேரத்தை வழக்குபோடும் பணியிலும் இவர்கள் கண்டிப்பாக செலவழித்தாக வேண்டும். இப்படி செய்திருப்பதால் அநியாய வசூல் வேட்டையை கண்ட்ரோல் செய்திருப்பதாக காக்கி காலரைத் தூக்கிவிடுகின்றனர் உயர் அதிகாரிகள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications