டெங்கு குறித்து ஆய்வு செய்ய புனே விஞ்ஞானிகள் நெல்லை வருகை: 3 நாட்கள் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய புனே விஞ்ஞானிகள் மூவர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படு்த்த மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். தென்காசி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் தினமும் பரிசோதனைக்காக வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 13,000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு மருந்து இல்லாத போதிலும் தடுப்பு நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை முறையால் காயச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் டைப்1, டைப் 2 வகை கொசுக்களால் அதிகம் பாதிப்பில்லை. ஆனால் நெல்லை மாவட்டத்தில் டைப் 3 வகை டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுளளது. இது குறித்து ஆய்வு செய்ய புனேயில் உள்ள தேசிய வைரஸ் நோய் நிறுவன விஞ்ஞானிகள் மூவர் நெல்லை வந்துள்ளனர்.

இந்தக் குழுவில் ஒரு டாக்டர், ஒரு பூச்சியியல் வல்லுனர், ஒரு ஆராய்ச்சியாளர் இடம் பெற்றுள்ளனர். அவர்களிடம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 25 பேரின் ரத்த மாதிரிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் நெல்லையில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+