ஜெயேந்திரர் பேச்சால் மன உளைச்சலில் உள்ளோம்-ரஞ்சிதா சகோதரி
Subscribe to Oneindia Tamil

நித்தியானந்தா குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜெயேந்திரர் நடிகை ரஞ்சிதா குறித்து சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜெயேந்திரர் மீது எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்குப் போட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று மாஜிஸ்திரேட் நசீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜோதி ஆஜராகி சாட்சியளிக்கையில், ஜெயேந்திரர் எனது சகோதரி ரஞ்சிதா பற்றி தெரிவித்த கருத்துகளால் குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். ரஞ்சிதாவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜெயேந்திரரின் பேட்டி வெளியானவுடன் பலர் எங்களுக்கு போன் செய்து விசாரித்தனர். இதனால் நாங்கள் அவமானத்துக்கு உள்ளானோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications