மேட்டூர் அணை திறப்பு ஜூன் 12-க்குப் பதில் தள்ளிப்போகிறது?

Subscribe to Oneindia Tamil

Mettur dam
மேட்டூர்: மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத நிலையில் வழக்கமாக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றும் மேலும் சில வாரங்கள் தள்ளிப்போகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேட்டூர் அணையின் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவின் ஆதாரமாகும். ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்படுவது வழக்கமான நடவடிக்கை. இதன் மூலம் 11 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் முப்போகம் நெல் விளைவிக்கப்படும்.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு இதுவரை டெல்டா பாசனத்துக்கு 79 முறை திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதில் ஜூன் 12-ந் தேதி 26 முறையும் ஜூன் 12-க்குப் பிறகு 52 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு முதன்முறையாக மேட்டூர் அணை வரலாற்றில் ஜூன் 6-ந் தேதியே அணை தீறக்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் அத்தகைய நிலைமை இல்லை.

மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லாத நிலையில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிட வாய்ப்புகள் இல்லை. மேட்டூர் அணையில் தற்போது 41.38 டி.எம்.சி. நீர் மட்டுமே இஉள்ளது. குறைந்தபட்சம் 50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால்தான் திறந்துவிட வாய்ப்பிருக்கிறது.

மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால், கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் பெறுவதற்கு தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+