தன் முதுகைப் பார்த்து விட்டு அடுத்தவர் முதுகைப் பார்க்க வேண்டும்-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: தன் முதுகைப் பார்த்துவிட்டு அடுத்தவர் முதுகை பார்க்க வேண்டும் என்று பழமொழி ஒன்று இருக்கு தமிழில். மத்திய அமைச்சர் ஒருவரை பதவி விலக வேண்டும் என்று சொல்லும் முதல்வர் ஜெயலலிதா, முதலில் தன் மீது உள்ள வழக்குகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பேசியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ள விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர் ஜாகிர் உசேனை ஆதரித்துப் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

ஓராண்டில் நூறாண்டு சாதனை செய்தவர்கள் இடைத்தேர்தலை கண்டு பயப்படுவது ஏன்? ஓராண்டில் நூறாண்டு சாதனை விளம்பரத்துக்காக 500 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய சாதனைகளை மக்கள் பணத்தில் எம்ஜிஆர் விளம்பரம் செய்ததில்லை.

தன் முதுகைப் பார்த்துவிட்டு அடுத்தவர் முதுகை பார்க்க வேண்டும் என்று பழமொழி ஒன்று இருக்கு தமிழில். மத்திய அமைச்சர் ஒருவரை பதவி விலக வேண்டும் என்று சொல்லும் முதல் அமைச்சர் ஜெயலலிதா, தன் மீது உள்ள வழக்குகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாக்குக்கு பணம், பொருள் கொடுக்கும் கலாசாரம் தமிழகத்தில் இருப்பதால்தான் இங்கு ஆளும்கட்சி வெற்றி பெறுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுத்திருந்தால், தேமுதிக போட்டியிட்டிருக்காது.

சங்கரன்கோவிலில் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால், புதுக்கோட்டையில் தேமுதிகவும், அதிமுகவும் மட்டுமே போட்டியிடுகின்றன. எனினும் 32 அமைச்சர்களை உள்ளடக்கிய 52 பேர் கொண்ட பணிக்குழு நூற்றுக்கணக்கான கார்களில் வலம் வந்து பிரசாரம் செய்கின்றனர்.

ரூ. 67 லட்சம் பறிமுதல் செய்ததை பெரிதாக பேசும் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்காக போன மாதமே இந்தத் தொகுதிக்குள் கொண்டு வந்த பணத்தை என்ன செய்ய முடியும்?

மணல் கொள்ளையே நடக்கவில்லை என முதல் நாள் கூறும் முதல்வர், அடுத்த நாள் மணல் கொள்ளையில் ஈடுபட்டோரிடம் ரூ. 13 கோடி தண்டத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியதால், மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்கிறார்.

இந்தத் தொதியில் அதிமுக தோற்றாலும் ஆட்சியில் மாற்றம் வராது. ஆனால், மீதமுள்ள ஆண்டுகளை மக்களுக்கான ஆட்சியாக மாற்ற முடியும்.

நான் எனது பணத்தில் தான் சுற்றுப்பயணம் செய்கிறேன். எனது கட்சி தொண்டர்களை செலவு செய்ய வைப்பது இல்லை. அவர்களை தலை குனிய வைக்கவும் மாட்டேன். எந்த இடத்திலாவது எனது கட்சி தொண்டன் கூட்டம் நடத்துவதற்கு நோட்டு போட்டு வசூல் செய்தான் என்று எந்த வியாபாரியாவது அல்லது கடைக்காரர்களாவது கூற முடியுமா?

மன உறுதி கொண்ட தொண்டர்கள் எனது கட்சியில் இருக்கிறார்கள். மக்களையும், தொண்டர்களையும் நம்பித்தான் நான் இருக்கிறேன். அவர்கள் தான் எனக்கு பலம். எனவே என்னையும், எனது கட்சியையும் யாராலும் அழிக்க முடியாது.

சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக தான் நினைக்கிறார். 32 அமைச்சர்கள், 10 மேயர்கள், 26 சேர்மன்கள் புதுக்கோட்டைக்கு வந்து மிரட்டி பார்க்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்.

2006 ம் ஆண்டு நான் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே எனக்கு வாக்களித்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என கேட்டு வருகிறேன். எனக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என கேட்கிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+