தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்தது!

தங்கத்தின் விலை குறைந்தாலும் உயர்ந்தாலும் அதை வேடிக்கை மட்டும் பார்க்கும் மனநிலைக்கு பலரும் வந்துவிட்டார்கள். சவரனுக்கு ரூ 1000 வரை உயர்த்துவதும், பின்னர் அதில் ரூ 100 குறைப்பதுகாக பகல் கொள்ளை நடந்து வருகிறது தங்க விற்பனையில்.
இதற்கு டாலர் மதிப்பு, ரூபாய் மதிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி கதைகளை வசதியாக கூறிக் கொள்கிறார்கள் ஆட்சியிலிருப்போரும் நகைக் கடைக்காரர்களும்.
கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.22,800-க்கும், ஒரு கிராம் ரூ.2,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்று ஒரே நாளில் ரூ 800-க்கும் அதிகமாக விலை உயர்ந்தது.
இப்போது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 குறைந்துள்ளது.
அதாவது, நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.22,424-க்கும், ஒரு கிராம் ரூ.2,803-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்திற்கும், ஒரு கிராம் ரூ.2,750-க்கும் விற்பனையானது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.58-க்கும், ஒரு கிலோ ரூ.54,170-க்கும் விற்பனையானது.












Click it and Unblock the Notifications