புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுகவிற்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு- சி.என்.ராமமூர்த்தி!
சேலம்: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க போவதாக வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலத்தில் அவர் கூறியதாவது
தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் இந்த ஒரு ஆண்டில் பல திட்டங்களை கொண்டு வந்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். இதனால் வன்னியர் கூட்டமைப்பு, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது.
மத்திய அரசு, மாநில அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடுகிறது. அது தவறான செயல். தற்போது ரயில்வே சரக்கு கட்டணத்தையும், பெட்ரோல் விலையையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வை மக்களின் நலன் கருதி மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அதிமுக போராட்டம் நடத்தியது. இதனால் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும் போது பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியது தவறு.
டாக்டர் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. ராமதாஸூம், அன்புமணியும் தவறாக பேசி சமுதாய மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களின் முயற்சி எடுபடாது.
தேர்தலின் போது டாக்டர் ராமதாஸ் அடிக்கடி கூட்டணி மாறுவதால் தான் அடுத்தடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறார். அந்த தோல்வி வரும் காலத்திலும் தொடரும் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications