For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 நாள் கஸ்டடி முடிந்தது- ஜெகனிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி சிபிஐ மனு

By Mathi
Google Oneindia Tamil News

Jagan Mohan Reddy
ஹைதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 7 நாள் சிபிஐ காவல் விசாரணை முடிவடைந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 25-ந் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆந்திர முதல்வராக ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி இருந்தபோது அமைச்சர்கள் உதவியுடன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்தார் என்பது சிபிஐ புகார். இதில் ஜெகன் கைது செய்யப்பட்டு 7 நாள் சிபிஐ கஸ்டடியில் வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. 7 நாள் கஸ்டடி முடிந்த நிலையில் இன்று ஜெகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 25-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே ஜெகனிடம் உண்மை கண்டறியும் சோதனையான நார்கோ சோதனை நடத்த அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜெகன் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள சிமெண்ட் நிறுவன நிர்வாகிகளிடம் இந்த வாரம் சிபிஐ விசாரணை நடத்தப்பட உள்ளது.

English summary
A Central Bureau of Investigation (CBI) trial court in Hyderabad has extended the judicial custody of YSR Congress chief Jagan Mohan Reddy till June 25 in the alleged disproportionate assets case. The CBI has also filed a petition for a narco analysis test on Jagan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X